வட்டவளை பிரதேசத்தில் கொவிட் தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அம்பகமுவ பிரதேச சுகாதார பிரிவுக்குட்பட்ட வட்டவளை பிரதேசத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட் 19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் 19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கைகள் வட்டவளை தமிழ் பாடசாலையில் இடம்பெற்றது.அம்பகமுவ பொது சுகாதார வைத்திய நிலையத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. கொவிட் 19 தடுப்பு மருந்தேற்றும் செயற்பாடுகளில் வட்டவளை கரோலினாதோட்டம,தியகல,வெலிவோய,வட்டவளைதோட்டம்,அகரவத்த,றொசல்ல,லொனேக் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.இதன் போது வட்டவளை நகரத்தின் பொலிஸ் நிலையத்திலிருந்து மிக நீண்ட வரிசை காணப்பட்டதோடு மக்கள் தடுப்பூசி மிக ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். அந்தவகையில் சுமார் 6000 மக்களுக்கு தடுப்பு மருந்தேற்ற எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது வட்டவளை பொலிஸார், அம்பகமுவ பொது சுகாதார பிரிவினர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் இச்செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கினிகத்தேனை தினகரன் நிருபர்)

 

 

Tue, 08/10/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை