கல்வி செயற்பாடுகள் செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய நேற்று நியமிப்பு

நாட்டின் கல்வி செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு, ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா, முன்வைப்பதற்கு முன்னதாக, கல்வி அமைச்சு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, இன்று கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Fri, 08/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை