நாட்டின் ஒரு சில இடங்களில் உணரப்பட்ட நில அதிர்வு

நாட்டின் ஒரு சில இடங்களில் உணரப்பட்ட நில அதிர்வு-Minor Earth Tremor Reported in Several Areas In Monaragala Hambantota

நாட்டின் ஒரு சில இடங்களில் நேற்றிரவு சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாந்தோட்டை, மொணராகலை மாவட்டங்களில் இவ்வாறு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (24) இரவு 9.00 - 9.20 மணிக்குள் இந்நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

மொணராகலை மாவட்டத்தின் தணமல்வில பிரதேசத்தில் 2.0 ரிச்டர் அளவிலான நில அதிர்வும், அம்பாந்தோட்டையின் யால உள்ளிட்ட பகுதிகளில் 2.5 ரிச்டர் அளவிலான சிறிய நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
 

Wed, 08/25/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை