ஹமாஸின் தலைவராக ஹனியே மீண்டும் தேர்வு

ஹமாஸ் அமைப்பின் தலைவராக இஸ்மாயில் ஹனியே போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காசாவில் ஆட்சியில் உள்ள அந்த அமைப்பில் அவர் தனது பிடியை மேலும் பலப்படுத்தியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு தொடக்கம் ஹமாஸ் தலைவராக செயற்பட்டு வரும் ஹனியே, காசா, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் காசாவுக்கு வெளியே வாழும் பலஸ்தீன புலம்பெயர்ந்தோரில் அந்த அமைப்பின் அரசில் செயற்பாட்டை வழி நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் துருக்கி மற்றும் கட்டாரில் வாழ்ந்து வருகிறார்.

எப்போது காசா திரும்புவேன் என்பது பற்றி அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

காசாவில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட கடந்த மே மாதம் இடம்பெற்ற இஸ்ரேலுடனான 11 நாள் மோதலிலும் ஹமாஸ் அமைப்பை அவர் வழிநடத்தி இருந்தார். எகிப்தின் மத்தியஸ்தத்துடன் அந்த மோதல் முடிவுக்கு வந்தது.

‘சகோதரர் இஸ்மைல் ஹனியே இரண்டாவது முறையாகவும் அமைப்பின் அரசியல் ஆலுகவல தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என்று ஹமாஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களின் உள்ளக தேர்தல் ஒன்றின் மூலமே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் போட்டி இன்றியே வெற்றியீட்டியுள்ளார். அவரது பதிவிக் காலம் அடுத்த நான்கு ஆண்டுகள் நீடிக்கும்.

58 வயதான ஹனியே ஹமாஸ் அமைப்பின் நிறுவனரான செய்க் அஹமது யாசீனின் வலது கையாக செயற்பட்டவராவார். இஸ்ரேல் வான் தாக்குதலில் யாசீன் 2004 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

Tue, 08/03/2021 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை