ஆட்டோ மரத்தில் மோதி இருவர் பலி

தனமல்வில பகுதியில் சம்பவம்

மயிலவல பகுதியில் வெலிஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி

விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்து தனமல்வில பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலங்கள், எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Mon, 08/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை