எனது தங்கைக்கு ஆங்கிலம் தெரியாது

சிறுமியின் சகோதரன் தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் என்ற தனது சகோதரி புவக்பிட்டிய சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ஆம் தரம் வரை மாத்திரம் கல்வி கற்றதாகவும், தனக்கு தெரிந்தவரை அவருக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாது எனவும் ஹிஷாலியின் சகோதரரான திருபிரசாத் தெரிவித்துள்ளார்.

ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் “என் மரணத்திற்கு காரணம்” என்ற ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த வாசகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தான் அறிந்தவரையில் தனது தங்கைக்கு ஏதேனும் ஒரு வாசகத்தை பார்த்து எழுதும் ஆற்றல் இருந்தாகவும், ஆனால் அவரால் இவ்வாறு ஒரு வசனத்தை எழுதும் அளவிற்கு கல்வியறிவு இல்லையெனவும் திருபிரசாத் மேலும் குறிப்பிட்டார்.

 

Wed, 08/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை