கடலுக்குள் எரிமலை வெடிப்பு: ஜப்பானில் புதிய தீவு தோற்றம்

கடலுக்கடியில் எரிமலை வெடித்ததில் ஜப்பானில் புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு 1,200 கிலோமீற்றர் தெற்கில் அந்த எரிமலை வெடித்துள்ளது. புதிய தீவு பிறை வடிவில், சுமார் ஒரு கிலோமீற்றர் விட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்தத் தீவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. அலை மோதல்களைத் தாங்க முடியாமல் போகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்லது எரிமலை தொடர்ந்து வெடித்தால், அதிலிருந்து வெளியாகும் எரிமலைக்குழம்பு தீவை வலுப்படுத்தலாம். இந்த பகுதியில் தொடர்ந்து எரிமலை வெடிப்பு நீடிப்பதால் இங்கு மேலும் தீவுகள் தோன்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது போன்று ஏற்கனவே 1904, 1914, 1986 ஆகிய ஆண்டுகளில் தீவுகள் உருவாகியுள்ளன. எனினும், அவை அனைத்தும் மண் அரிப்பால் காணாமற்போய்விட்டன.

ஜப்பானை சூழ தற்போது 110 எரிமலைகள் இயக்கத்தில் இருப்பதோடு அதில் 47 தொடர்ச்சியான கண்காணிப்பில் உள்ளன.

Thu, 08/19/2021 - 17:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை