அரசின் ஒரு வருட கால சாதனை நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி

சர்வ மதத் தலைவர்கள் ஆசிகளுடன் வாழ்த்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இந்நாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் அமைக்கப்பட்ட இன்றைய அரசாங்கம் ஆட்சி அமைத்து ஒரு வருடகாலம் நிறைவுபெறும் இத்தருணத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு தங்களது ஆசிகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோமென சர்வ மதத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வருட காலமாக இந்த அரசாங்கம் பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தாக்குதலுக்கும் முழு நாடும் உள்ளாகிய இத் தருணத்தில் மக்களை முடிந்தளவில் அவற்றிலிருந்து காப்பாற்றி சிறந்த திறமையான ஆட்சி நடத்துவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இது மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கம், அதனால் மக்களுக்கு முன்னுரிமையளித்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மிகவும் புத்தி சாதூர்யமாக நடந்து நாடு எதிர்கொள்ள இருந்த பல இன்னல்களிலிருந்து நாட்டு மக்களை விடுவித்து வெற்றிகரமாக இந்த அரசாங்கம் தனது பயணத்தை முன்னெடுத்து வருகின்றது.

இதுவே வேறு ஒரு கட்சியின் தலைமையிலான அரசாங்கமாக இருந்திருந்தால் நாட்டு மக்கள் நிச்சயம் பல இன்னல்களை சந்தித்திருப்பார்கள். துணிந்து முடிவெடுக்க முடியாத அரசாங்கங்களை நாங்கள் முன்னர் கண்டிருக்கின்றோம் . ஆனால் இன்றைய ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களது சிறந்த எதிர்கால சிந்தனை மூலமாக நாட்டு மக்களை காப்பாற்றி வருகிறார்கள்.

குறிப்பாக கொடிய வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல சர்வதேச நாடுகள் பாராட்டியுள்ளன. எனவே நாங்களும் அதனை பாராட்டாமல் இருக்க முடியாது. தொடர்ந்தும் இதே போன்று மக்கள் நலன் கருதி மக்களுக்காக இந்த அரசாங்கம் செயற்படும் என்ற நம்பிக்கையில் அரசியல் தலைமைகளுக்கு எங்களது மும்மணிகளின் ஆசிகளை கூறி ஆசீர்வாதம் அளிப்பதாக பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Fri, 08/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை