இரண்டு எம்.பிக்களின் வாக்கை கணக்கிட தவறியமை எப்படி?

சபாநாயகரிடம் மீண்டும் சாகர காரியவசம் விசனம்

இதுவரை பொறுப்பான பதில் இல்லை எனவும் சுட்டிக்காட்டு

கடந்த மே 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கை முறையாக வாக்கெடுப்புச் செய்யாதமை

தொடர்பில் சாகர காரியவசம் எம்.பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்று ஐந்து மடங்கு அதிகாரிகள் பணிபுரியும் பாராளுமன்றத்தில் எந்த அதிகாரிகளுக்கும் அது தொடர்பில் பொறுப்புகள் கிடையாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

அதற்கு மறு தினம் நான் உங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

மேற்படி வாக்களிப்பின் போது ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. எனினும் எண்ணிக்கையின் போது முறையாக அது தெரிவிக்கப்படாத நிலையில் எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடையாது என்ற சந்தோசத்தில் திளைத்தனர். எவ்வாறெனினும் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதை நாம் பின்பு வாக்களிப்பின் போது உறுதிப்படுத்துவோம்.

மேற்படி சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரான நீங்கள் இரண்டு குழுக்களை நியமித்தீர்கள்.அதற்கிணங்க ஜயந்த டி சில்வா குழு அறிக்கையும் தம்மிக்க கிதுல்கொட குழுவின் அறிக்கையும் பெறப்பட்டுள்ளன.

அதற்கிணங்க தொழில்நுட்ப குழுவானது அன்றைய தினம் கணினி கட்டமைப்பில் எந்தவித தவறும் இருக்கவில்லை என தெரிவித்துள்ளது.

அதேவேளை தம்மிக்க கித்துள்கொட குழுவானது அதன் அறிக்கையில் அன்றைய தினம் ஆளும் கட்சியைப் போன்று எதிர்க்கட்சி எம்.பிக்களினதும் வாக்களிப்பு பதிவாகவில்லை என குறிப்பிட்டுள்ளது.

இன்று இரண்டு அறிக்கைகளையும் நோக்கும் போது எங்கு தவறு ஏற்பட்டுள்ளது என்பதை அறிவது ஒருபுறமிருக்க கணக்கெடுப்பில் நிகழ்ந்த தவறை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்துவதாகவே அமைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Fri, 08/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை