ஒட்சிசனை ஏற்றிவரும் கப்பல்களின் இலங்கை நோக்கிய பயணம் ஆரம்பம்

22, 23ஆம் திகதிகளில் கொழும்பை வந்தடையும்

 

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற கடற்படையின் சக்தி கப்பல் மருத்துவ தர ஒட்சிசன், சிலிண்டர்களுடன் சென்னை துறைமுத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய அரசிடமிருந்து கோரப்பட்ட மருத்துவ தர ஒட்சிசன், சிலிண்டர்களை எடுத்துவர கடந்த 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்படையின் சக்தி கப்பல் சென்னை துறைமுகத்தை நோக்கி பயணமானது. கடந்த 19 ஆம் திகதி இக்கப்பல் சென்னை துறைமுகத்தை அடைந்துள்ளது. மருத்துவ தர ஒக்சிஜன் சிலிண்டர்களை இரவே கப்பலுக்கு  ஏற்றப்பட்டதுடன் நேற்று (20) அதிகாலை சென்னை துறைமுகத்திலிருந்து அக்கப்பல் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளது.

அதே போன்று மருத்துவ தர ஒட்சிசன் சிலிண்டர் தொகையுடன் இந்திய கடற்படையின் சக்தி என்ற கப்பலொன்றும் இந்தியாவின் விசாகபட்டிணம் துறைமுகத்திலிருந்து 19 ஆம் திகதி இரவு இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படைக் கப்பலான சக்தியும் இந்திய கடற்படைக்கப்பலான சக்தியும் 22 ஆம் திகதி மாலையும் 23 ஆம் திகதி அதிகாலையும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.

இந்தியாவிடமிருந்து கோரப்பட்ட மருத்துவ தர ஒட்சிசன் சிலிண்டர் தொகையை இலங்கை கடற்படைக் கப்பலூடாக இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இந்திய கடற்படைத் தளபதி கரம்பீர் சிங்கிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளையடுத்து அதன் பிரதி பலனாக இரு நாடுகளினதும் கடற்படைகளின் உறவை வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படையின் சக்தி கப்பலும் மருத்துவ தர ஒட்சிசன் தொகையை இலங்கைக்கு கொண்டுவர முன்வந்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 08/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை