சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசா காலமானார்!

மனித உரிமைகள் தொடர்பிலான சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா நேற்று முன்தினம்(23) தனது 66 ஆவது வயதில் காலமானார். ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் மனைவியான சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா, கொவிட் 19 தடுப்பூசி பெர்றுக்கொண்ட பின்னர் ஏற்பட்ட சுவாசப் பிரச்சினை காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் ஒரு வாரத்துக்கும் அதிகமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாட்டில் பல முன்னணி வழக்குகளை தாக்கல் செய்துள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா, மனித உரிமைகள், கருத்து சுதந்திரம், சட்டவிரோத கைதுகள், தடுத்து வைப்புக்கள் தொடர்பில் பல்வேறு முக்கிய வழக்குகளை தாக்கல் செய்து நியாயம் பெற்றுக் கொடுக்க பாடுபட்டவராவார்.

 

Wed, 08/25/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை