மகளிர் மீதான வன்முறை ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு

பைசலாபாத் ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பு

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், கௌரவ கொலைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டிக்கும் வகையில் லாஹூர் பைசலாபாத் நகரில் நடத்தப்படவிருந்த அமைதி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு காரணமாக பின்போடப்பட்டுள்ளது. இதையடுத்து வலைத் தளங்கள் ஊடாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் இத்தடையுத்தரவுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாணவர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பெண்களால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுவதற்காக இந்த 'அவுரட்' பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடெங்கும் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் அரசோ அதை ஆங்காங்கே நடைபெறும் சாதாரண சம்பவங்கள் போலக் காட்ட முயல்கிறது. பாலின ரீதியாக வன்முறைகள், சிறுபான்மையினர் மீதான மத ரீதியான தாக்குதல்கள் என்பன உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் பொருட்டு இருபது அம்ச கோரிக்கை மனுவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது, வெளிப்படைத் தன்மை, பாலின அடிப்படையில் வன்முறைச் சம்பவங்களை அறிவிக்கும் நிலையம் அமைப்பது, வீட்டு வன்முறைச் சம்பவங்களை முறைப்பாடு செய்வதற்கான இலவச தொலைத் தெடர்பு வசதி, மகளிர் துஷ்பிரயோகம், பால்ய விவாகம், கௌரவக் கொலை என்பனவற்றுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளில் சிலவாகும்.

இதே சமயம் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அனுமதி பெறுவதற்காக பொலிஸ் அலுவலகம் சென்ற போது ஆர்ப்பாட்டம் நடைபெறுமானால் கைது செய்யப்படுவீர்கள் என பயமுறுத்தப்பட்டதாக இணைய தளத்தில் தெரிவித்துள்ளார்.

Tue, 08/10/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை