ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஐ.அ. இராச்சியத்தில் அடைக்கலம்

ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடைக்கலம் பெற்றதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலை நோக்கி முன்னேறியதை அடுத்தே கனி நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் கனி மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வரவேற்றதாக ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கடந்த புதன்கிழமை கனி வெளியிட்ட வீடியோ அறிவிப்பு ஒன்றில், தாம் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக கூறுவதை மறுத்துள்ளார். பெரும் பேரழிவு ஒன்றை தவிர்ப்பதற்கே தாம் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

‘இப்போது நான் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருப்பதால் இரத்தம் சிந்தப்படுவது மற்றும் குழப்பம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானுக்கு திரும்புவது பற்றி நான் தற்போது பேசி வருகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் தொகை பணத்துடன் தாம் நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுவது, ‘முற்றும் அடிப்படைய அற்றது’ என்றும் ‘பொய்யானது’ என்றும் அவர் மறுத்தார்.

Fri, 08/20/2021 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை