அடுத்த இரண்டு வாரங்களில் உயிரிழப்புகள் அதிகரிக்கும்

PHI அதிகாரிகள் சங்கம் எச்சரிக்ைக

இனிவரும் இரு வாரங்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொவிட்19 தொற்றாளர்கள் மற்றும் கொவிட்19 தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்குமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

மாவட்டங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலதிக அல்லது தேவையற்ற ஊழியர்களை நிறுவனங்கள் அழைப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சுகாதார தரப்புக்கு சமாளிக்க முடியாதளவிலான நோயாளர்கள் பதிவாவதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ள அவர், பொருளாதாரம் பாதிக்கப்படுவதை குறைப்பதற்காக, அனைவரும் ஒன்று கூடுவதை நிறுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

 

 

Wed, 08/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை