ஆப்கானுக்கான நிதியை நிறுத்தியது உலக வங்கி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் அந்நாட்டில் இடம்பெறும் திட்டங்களுக்கான நிதிகளை உலக வங்கி நிறுத்தியுள்ளது.

தலிபான்கள் நாட்டை கைப்பற்றி இருப்பது நாட்டின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகள், குறிப்பாக பெண்கள் தொடர்பில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் ஆப்கானுக்கான நிதியை இடைநிறுத்தி சில நாட்களிலேயே உலக வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள ஆப்கான் மத்திய வங்கியின் சொத்துகளை அமெரிக்க நிர்வாகம் முடக்கி உள்ளது.

ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியிடம் சுமார் 9 பில்லியன் டொலர் கையிருப்பு இருந்தபோதும் அதில் பெரும் பங்கு அமெரிக்காவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மீள் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 2002 தொடக்கம் 5.3 பில்லியன் டொலர்களுக்கு மேல் உலக வங்கி வழங்கியுள்ளது.

உலக வங்கியின் முடிவு ஆப்கானிஸ்தானின் புதிய அரசுக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது.

Thu, 08/26/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை