புதிய நீர் இணைப்புக்கான மேலதிக கட்டணம் நீக்கம்

புதிய நீர் இணைப்பின் போது உரிமை கோரப்படாத காணிகளுக்கான அறவிடப்படும் கட்டணத்தை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதே நாணயக்கார நீக்கியுள்ளார்.

அரசினால் வழங்கப்பட்டுள்ள காணிகளில் குடியிருப்போருக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்கும்போது அந்தக் காணிகளுக்கான உரிமை இன்மை காரணமாக நீர் இணைப்பு கட்டணத்துக்கு மேலதிகமான ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்படும் பத்திரத்தில் உரிமையின்றி குடியிருப்பவர்களென குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்களிலிருந்து இந்த மேலதிக கட்டணம் அறவிடப்படுகின்றது. இது தொடர்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களினால் நீர் வழங்கல் அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு புதிய நீர் இணைப்புக்களை வழங்கும்போது உரிமையின்றி குடியிருப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் 1,500 ரூபாய் மேலதிக கட்டணத்தை நீக்குவதற்கு நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த மேலதிக கட்டணத்தை நீக்கும் சுற்றுநிருபத்தை (ஓகஸ்ட் 23) முதல் செயற்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Wed, 08/25/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை