அழியும் அபாயத்திலிருந்து யானை இனத்தை காப்பது எமது கடமை

யானைகள் பாதுகாப்பு தினத்தில் பிரதமர் தெரிவிப்பு

அழியும் அபாயத்திலிருக்கும், யானைகளைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கமாக நம் அனைவரின் பொறுப்பாகும். அத்துடன், அதற்காக ஒரு தேசமாக அனைவரும் அணிதிரள வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினத்தையிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கனேடிய தேசிய திரைப்பட தயாரிப்பாளரான பிரிட்டிசியா சிடி மைக்கல் க்லாக் மற்றும் யானைகள் மீளறிமுக அறக்கட்டளையின் செயலாளர் சிவபோன் தர்தரானந்த ஆகியோரின் தலைமையில் யானைகள் மீளறிமுக அறக்கட்டளையினால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சர்வதேச யானைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

'அற்புதமான விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தேடி அறிவதற்கு சிறந்த காலம்' என்பதே சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினத்தின் தொனிப்பொருளாகும். காட்டு யானைகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்கான நேர்மறையான தீர்வாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு படைப்பாற்றல் மிக்க அறிவை பரப்புதல் என்பது சர்வதேச யானைகள் தினத்தின் குறிக்கோளும் பணியுமாகும்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும் கலாசாரம் ஊடாக நேசிக்கப்படும் மற்றும் மதிக்கப்படும் விலங்காகக் காணப்படும் யானைகளின் பாதுகாப்பிற்காக ஒரு அரசாங்கமாக நாம் எப்போதும் முன்நின்றோம். அவற்றின் பாதுகாப்பிற்காக பாரிய சேவையாற்றியுள்ளோம்.

மேலும் பழங்காலத்திலிருந்தே இலங்கை கலாசாரத்தை உலகுக்கு உணர்த்தும் கலாசார நிகழ்வான பெரஹர போன்ற நிகழ்வுகளின் மூலம் இந்த மரியாதைக்குரிய விலங்கு இலங்கை சுற்றுலாத்துறைக்கு அளித்த சேவை மகத்தானது.

வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு, மனித-யானை மோதல் போன்றன ஆபிரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்கு பல அச்சுறுத்தல்களாகும். காட்டு யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குதல், சட்டவிரோத வேட்டை மற்றும் யானை தந்த வர்த்தகத்தை தடுக்க சட்ட அமுலாக்க கொள்கைகளை மேம்படுத்துதல், யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், பிடிக்கப்பட்ட யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களுக்கு திருப்பி அனுப்புதல் என்பன யானைகள் பாதுகாப்பின் நோக்கமாகும். உலகெங்கிலும் உள்ள யானைகள் பாதுகாப்பு அமைப்புகளும் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இலங்கையில் அதிகளவில் பேசப்படும் மற்றும் மக்களை சிரமத்திற்கு உட்படுத்தும் யானை – மனித மோதலை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் இதுவரை பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.

Thu, 08/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை