நாட்டை மூடிவைத்தால் இலங்கை தாங்காது

திறக்க வேண்டுமென டுவிட்டர் பதிவு

நாட்டை தொடர்ந்து முடக்கி வைப்பதால் இக்கட்டான நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தற்போதைய முடக்கல் நிலைமையை எதிர்கொள்ள முடியாது, சிறிய மற்றும் நடுத்தர பொருளாதாரத்தைக் கொண்ட சுமார் 45 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் தொடர்ந்தும் இதனை தாங்கிக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதுடன் தொழில், வியாபாரம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில் நாடு திறக்கப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Mon, 08/30/2021 - 20:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை