ஆப்கானில் தலிபான்களின் முதலாவது ‘பத்வா’ தீர்ப்பு

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வாரம் கடந்த நிலையில் ஹெரத் மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்களும் பெண்களும் ஒரே வகுப்பறையில் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தலிபான் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தனியார் பல்கலைக்கழக உரிமையாளர்கள் இடையே மூன்று மணி நேரம் இடம்பெற்ற சந்திப்பில், இணைந்து கற்பதைத் தொடர்வதினை நியாயப்படுத்த முடியது என்றும் அது முடிக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெரத் மாகாண சந்திப்பில் தலிபான்கள் சார்பில் பங்கேற்ற ஆப்கான் இஸ்லாமிய எமிரேட்ஸின் உயர் கல்வித் தலைவர் முல்லா பரீத், இணைந்து கல்விகற்கும் முறை கொடிய சமூகத்தின் பின்னணியைக் கொண்டது என்பதால் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Wed, 08/25/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை