அமரபுர மகா நிக்காயவின் புதிய மஹாநாயக்க தேரரை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா அமரபுர மஹா நிக்காயவின் புதிய மஹாநாயக்க தேரர் அக்கமகா பண்டித சங்கைக்குரிய தொடம்பஹல சந்தசிறி தேரரை, (05) பிற்பகல் சந்தித்தார்.

தேரர், வதியும் ராஜகிரிய - கலபலுவாவ, தப்போவன தியான நிலையத்துக்குச் சென்ற ஜனாதிபதி, புதிய மஹாநாயக்க தேரருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சாசனத்துக்கும் சமய மற்றும் தேசிய ரீதியில் அமரபுர மஹா நிக்காய மேற்கொண்டு வரும் சேவைகளைப் பாராட்டிய ஜனாதிபதி, அப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, தன்னுடையதும் அரசாங்கத்தினதும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகதெரிவித்தார். மஹாநாயக்கத் தேரரின் நீடூழி வாழ்வுக்காகப் பிரார்த்தித்த ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுப் பதிவேட்டில் விசேட குறிப்பொன்றைப் பதிவு செய்து கைச்சாத்திட்டார். வாளர் சங்கைக்குரிய பல்லேகந்தே ரத்னசார அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர், இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.

Sat, 08/07/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை