தடுப்பூசி ஏற்றாதோரை தேடும் பணிகள் தீவிரம்

கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக ஆரம்பம்

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் வழங்கியுள்ள நிலையில் தடுப்பூசியை ஒரு சதவீதமானோர் ஏற்றிக் கொள்ளாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊசியை ஏற்றிக் கொள்வதில் உள்ள பயமே இதன் முக்கிய காரணமாகும். அவ்வாறு தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்ளை தேடும் நடவடிக்கை  கிராம சேவகர் பிரிவுகளின் ஊடாக ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா பரவலின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு பொது மக்கள் முறையான சுகாதார விழிப்புணர்வுகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் உரிய முறையில் செயல்படவில்லையாயின் மீண்டும் ஆபத்தான நிலைமைக்குள் செல்ல நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை