இஸ்ரேல் - காசா பதற்றம் அதிகரிப்பு

காசாவில் இருந்து எரியும் பலூன்களை இஸ்ரேல் மீது பறக்கவிடுவதற்கு எதிராக காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

காசா மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு கூடிய நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் வெடிபொருட்களை வீசி டயர்களை எரித்ததை அடுத்து அவர்களை கலைக்க நடவடிக்கை எடுத்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. காசா மீதான முற்றுகையை தளர்த்த அழுத்தம் கொடுக்கும் வகையில் எல்லை பகுதியில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக பலஸ்தீன போராட்டக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இதனை அடுத்து அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது இஸ்ரேல் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொண்டது. இதனால் 11 பலஸ்தீனர்கள் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசா நோக்கி பொருட்கள் செல்வதை கட்டுப்படுத்தும் இஸ்ரேல், மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதனால் அங்குள்ள இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை