ஹொங்கொங்வாசிகளுக்கு அமெரிக்காவில் பாதுகாப்பு

அமெரிக்காவில் வசிக்கும் ஹொங்கொங்வாசிகளுக்குத் தற்காலிகப் பாதுகாப்பு அளிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வந்துள்ளார்.

அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஹொங்கொங்வாசிகள் மேலும் ஒன்றரை ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி, வேலை செய்ய அனுமதி வழங்கப்படும்.

‘கட்டாய வெளியுறவுக் கொள்கைக் காரணங்களால்’ அந்த முடிவு எடுக்கப்பட்டதாக, வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

ஹொங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் மீது சீனா தாக்குதல் நடத்துவதாக பைடன் சாடினார்.

அதனால் ஹொங்கொங்கில் உரிமைகளும் சுதந்திரமும் கணிசமாகச் சீர்குலைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஹொங்கொங்கிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை சீனா மீறுவதை, அமெரிக்கா பார்த்துக்கொண்டு இருக்காது என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

 

Sat, 08/07/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை