சிட்னியில் முடக்கநிலை நீடிப்பு

டெல்டா கொரோனா வைரஸ் திரிபை கட்டுப்பாடுத்துவதில் நிர்வாகம் போராடி வரும் நிலையில் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் முடக்கநிலை செப்டெம்பர் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த நகரில் உள்ள ஐந்து மில்லியன் மக்களும் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் வீட்டில் தங்கியிருக்கும் கட்டுப்பாட்டுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

எனினும் கடந்த இரு வாரங்களில் நோய்த் தொற்று இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. நேற்று 642 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவானதோடு வியாழனன்று 681 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நகரில் மோசமாக பாதிக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் வரும் திங்கட்கிழமை தொடக்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

‘இந்த சமூகத்தின் பெரும்பாலானவர்கள் சரியானதையே செய்தபோதும் எமது சுகாதார மற்றும் பாதுகாப்பிற்காக இந்த கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டதை இட்டு நான் வருந்துகிறேன்’ என்று நியு சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சர் கிளடி பிரஜிக்லயன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து கடந்த வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் தினசரி நோய்த் தொற்று புதிய உச்சத்தை தொட்டது.

Sat, 08/21/2021 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை