சீனன்கோட்டை இரத்தினக்கல் சந்தை இரு வாரங்களுக்கு பூட்டு

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பேருவளை, சீனன்கோட்டை இரத்தினக்கல் வர்த்தக சந்தை நேற்று (12) முதல் இரு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக சீனன்கோட்டை பள்ளிச்சங்கம் மற்றும் சீனன்கோட்டை இரத்தினக்கல் வியாபாரிகள் சங்கமும் கூட்டாக அறிவித்துள்ளது.

நாட்டிலும் ஊரிலும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக இந்த முடிவை பள்ளிச்சங்கமும் சீனன்கோட்டை மாணிக்கக்கல் வியாபாரிகள் சங்கமும் எடுத்ததாக மாணிக்கக்கல் வியாபாரிகள் சங்க செயலாளர் லியாகத் ரஸ்வி தெரிவித்தார்.

மேலும் இந்த மாணிக்கக் கல் சந்தையில் வெளிநாடுகளைச் சேர்ந்த மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த அதிகளவிலான வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் நலன் கருதியும் ஊர் மக்களின் நலன் கருதியும் மேற்படி நடவடிக்கை மேற்கொண்டதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Fri, 08/13/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை