ஆப்கானில் பெண்களின் உருவப்படங்களுக்கு சேதம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கடை முகப்புகளில் தென்படும் பெண்களின் படங்கள் மறைக்கப்பட்டு அல்லது சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை குறித்துக் கவலை எழுந்துள்ள வேளையில் அதுபற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

1996இலிருந்து 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பெண்கள் கல்வி கற்கவும், பயணம் மேற்கொள்ளவும், வேலை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை விதிக்கப்பட்ட அழகுப் பராமரிப்பு நிலையங்கள் அனைத்தும் பின்னர் மீண்டும் செயல்பட ஆரம்பித்தன. காபூலில் தற்போது நூற்றுக்கணக்கான அழகுப் பராமரிப்பு நிலையங்கள் உள்ளன.

தலிபான் மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர், சில வர்த்தகங்கள், கடைகளை மூடவேண்டியிருக்குமோ என்று அஞ்சுகின்றன. இந்நிலையில், ஆப்கானியப் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து, உலகெங்கும் சில நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை, பெண்களின் பாதுகாப்புக் குறித்தும் உரிமைகள் குறித்தும் அக்கறை தெரிவித்துள்ளன.

இருப்பினும், பெண்கள் கல்வி கற்கமுடியும் என்றும், அவர்கள் ஆரம்ப பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் வரை சென்று பயில முடியும் என்றும் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

பெண்கள் முகத்தையும் உடலையும் மறைக்கும் புர்கா எனும் முழுமையான வெளியாடை அணிவது கட்டாயமாக்கப்படாது என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர்.

 

Fri, 08/20/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை