பாக்.- சீனா பொருளாதார திட்டங்களில் தொய்வு; உரிய பலன் கிட்டுமா என மக்கள் சந்தேகம்

 பாகிஸ்தானில் சீனா, பாகிஸ்தான் சீன பொருளாதார வழிப்பாதை என்றபெயரில் அறுபது மில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. பெருந்தொற்று உட்பட பல காரணங்களின் பேரில் இத் திட்டங்கள் நிறைவுபெறாமல் இழுபறியில் உள்ளதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்நிலை காணப்படுவதாகவும் ஆசியன் லைட் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இத் திட்டங்களில் ஐந்து மின்சாரத் திட்டங்களும் அடங்கும் என்பதால் அவற்றை விரைவுபடுத்தும் படியும் இத் திட்டங்களை கண்காணிக்கும் குழுவின் தலைவரான பாக். திட்ட அமைச்சரான ஆஸாத் உமர், மாடியாரியில் இருந்துலாஹுக் வரையிலான 660 கிலோ வாட்ஸ் கேபிள் தொடர்புகளை செப்டம்பரில் இருந்துசெயல்படும் படி அமைக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேசமயம் தாகொட் - ராய்கொட் மற்றும் ஸோப் - குவெட்டா பாதை அமைப்புதொடர்பான தாமதம் பற்றியும் இத்திட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டதாகவும் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

பாக். - சீனா பொருளாதார பெருந்திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் தனது பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும் என அந்நாட்டுஅரசு நம்பினாலும் கடன் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சீனா சில திட்டங்களை இடை நிறுத்தியுள்ளது. மேலும் சீனா முதலீட்டுடனான அபிவிருத்தி மூலோபாயத்துக்கு பாக். மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் இத் திட்டங்கள் ஏற்படுத்தக் கூடிய கடன் பொறி, வெளிப்படைத் தன்மை அற்ற நிலை, சீனா இராஜ தந்திரத்தின் தீவிரத் தன்மை மற்றும் அளவுக்கு அதிகமான சீனத் தொழிலாளர் இத்திட்டங்களில் ஈடுபடுத்தப்படுதல் என்பன பாக். மக்களிடம் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருப்பதாக இச் செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Mon, 08/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை