நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது

ஹரீன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் வழங்கப்பட்ட எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதனால் இன்று நாட்டை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மக்களுக்கே ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் ஆட்சிக்குவந்து ஒருவருடமாகின்றது. நாட்டை பாதுகாக்க வீரர் ஒருவரை கொண்டுவருவதாகவே அன்று தெரிவித்தனர். ஒருவருடமாகியும் அந்த வீரருக்கு நாட்டை பாதுகாக்க முடியாமல் போயிருக்கின்றது. ஆனால் தற்போது அந்த வீரரிடமிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டிய நிலை தற்போது மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

கொவிட் 19 ஆல் வைத்தியசாலைகள்நிரம்பி வழிகின்றன. நோயாளர்கள் வைத்தியசாலைகளில் இடமில்லாமல் தரையில் அமர்ந்திருப்பதை காண்கின்றோம்.

அந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தும் அரச தரப்பினர் சஜித் பிரேமதாச ஏற்றிக்கொண்ட தடுப்பூசி தொடர்பாக கதைத்து வருகின்றனர். இன்று கொவிட் 19ஆல் சீனாவில் மரணித்த வீதத்துக்கும் அதிகம் வீதம் எமது நாட்டில் மரணித்துள்ளனர்.

நாட்டில் கொவிட்19 தொற்று தீவிரமாக பரவிச் செல்கின்றது. அதனை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Sat, 08/07/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை