சீனாவில் ஒருவருக்கும் நோய்த் தொற்று இல்லை

சீனாவில் சுமார் ஒரு மாதத்தில் முதன்முறையாக உள்ளூர் அளவில் எவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

கடந்த மாதம் 20ஆம் திகதி, நான்ஜிங் நகர விமான நிலைய ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து 1,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இம்மாத ஆரம்பத்தில் நோய்ப்பரவல் உச்சத்தைத் தொட்ட பின்னர், கடந்த வாரம், நாளொன்றுக்குப் பத்துக்கும் குறைவான சம்பவங்கள் பதிவாகின.

இருப்பினும் வாரயிறுதியின்போது, ஷாங்ஹாய் விமான நிலையம் ஒன்றில் சரக்குகளைக் கையாளும் ஊழியர்களுக்குக் வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அதன்பின்னர், ஷாங்ஹாயில் உள்ளூர் அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை. எனினும் அங்கு தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

Tue, 08/24/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை