மாத்தளையின் ஜீவநதி கார்த்திகேசு காலமானார்

மாத்தளையின் ஜீவநதியென எழுத்து, இலக்கிய ஆளுமைகளினால் அழைக்கப்பட்ட மாத்தளை கார்த்திகேசு நேற்று தனது 82 ஆவது வயதில் மாத்தளையில் காலமானார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் ஆகியவற்றின் ஸ்தாபக உறுப்பினரான இவர், அவைகளின் வளர்ச்சிக்காக முன்னின்று உழைத்தவர். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பொருளாளராக, உதவிச் செயலாளராக பணியாற்றிய இவர், மாணவ பருவத்திலேயே எழுதத் தொடங்கியவர். நாடகம், சிறுகதை, கட்டுரை, நூல் வெளியீடுகள் என்று இத்துறைகளில் ஆழமான முத்திரையைப் பதித்தவர்.

60 களின் பிற்பகுதியில் மாத்தளையில் இவர் ஆரம்பித்த இலக்கியப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தவர். சினிமாத் துறையிலும் காலடி வைத்ததோடு 20 க்கு மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றி புகழ் பெற்றவர். வானொலி, தொலைக்காட்சி, நாடகங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இறுதி மூச்சுவரை மலையகம் குறித்தும் மலையக எழுத்து இயக்கம் குறித்தும் சிந்தித்து செயற்பட்ட இந்த பெருமகனின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தகவல் எச்.எச். விக்கிரமசிங்க

Sat, 08/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை