வெளிநாட்டு பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாடு இல்லை

வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் என தெரிவித்த அவர்,உயிர்க் குமிழி (Bio -bubble) திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

சுற்றுலா பயணிகள் தங்களுக்கான ஹோட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதி​களையும் ஏற்படுத்திக்கொள்தல் வேண்டும்.

அதற்கமைய, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Thu, 08/26/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை