ரிஷாத்தின் வீட்டில் மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்

மைத்துனரால் தொந்தரவு குறித்து வாக்குமூலம் 

பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு

 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு 29 வயது யுவதி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் ‍தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய 29 வயது யுவதி ஒருவரை ரிஷாத் பதியுதீனின்  மைத்துனர் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிஷாத் பதியுதீனின் மைத்துனர், அவ்வீட்டில் பணியாற்றிய மற்றொரு யுவதியை துஷ்பிரயோகப்படுத்தினார் என்ற சந்தேகத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2009 முதல் 2010 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 29 வயது யுவதி ஒருவர், ரிஷாத் பதியுதீனின் மைத்துனரால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாக வாக்குமூம் அளித்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி தற்போது பணியாற்றும் களனி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை