ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் அதிகபட்ச கொள்ளளவு என்ன?

சுகாதாரத்துறையினரிடம் ஜனாதிபதி அறிக்ைக கோரல்

ஆஸ்பத்திரிகளில் தற்போது எந்தளவு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை சிகிச்சைக்காகத் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளுக்கு உச்சளவில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே அது தொடர்பில் ஜனாதிபதி முழுமையான அறிக்கையை கோரியுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சைகளை வழங்குதல் சம்பந்தமாக மேலும் சில திட்டங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் மரணங்களை தவிர்ப்பதற்கு ஒரே தீர்வு தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 08/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை