கொரோனா முற்றாக அழிய வாய்ப்பில்லை

சிறிது காலம் கொவிட்டுடன் வாழப் பழக வேண்டும்

கொவிட் மீண்டும் பூஜ்ஜியத்தை அடைய வாய்ப்பில்லை என அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன் இதனை நேற்று தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டை முடக்குவதால் கொவிட்டை முடிவுக்கு கொண்டு வர முடியாது. நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் உருமாறிய கொரோனா கிருமியால் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தன. இதனால் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தக்கூடியதாக இருந்தது.

நாடு முடக்கப்பட்டு தடுப்பூசி போடுவதால் தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடியும். அதற்கு என்னால் உதவி செய்ய முடியும். ஆனால் தடுப்பூசி மட்டுமே முடக்கநிலையை முடிவுக்கு கொண்டு வராது என்றார்.

அவுஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் உள்ளது. இந்த மாநிலத்தில் கிருமித்தொற்று புதிய உச்சத்தைத் தொட்டது.

அன்று ஒரு நாள் மட்டும் 239 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதற்கு முன்னைய நாளன்று 177 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் சிட்னியில் முடக்கநிலை ஏற்படுத்தப்பட்டது. தொற்று ஏற்படக்கூடிய மோசமான இடங்களில் நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பின் பற்றி கொரோனா கிருமியை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய செயற்பட்டாலும் கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து கொரோனாவின் பரவல் குறைந்தாலும் கொரோனா உருமாறி டெல்டாவாக பரிமாணம் பெற்றதால் அது தீவிரமாகப் பரவத் தொடங்கியது.

இதனால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே நாட்டை முற்றாக முடக்குவதால் எம்மால் கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியாது.

நாம் குறிப்பிட்ட காலப் பகுதிக்கு கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

Mon, 08/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை