மயூரபதி அம்பாளின் ஆடிப்பூர பாற்குட பவனி இடம்பெறாது

வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர பாற்குட பவனி இவ்வாண்டு (நாளை புதன்கிழமை) இடம்பெற மாட்டாது என ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நிலைமைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tue, 08/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை