அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் 7 நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் மெல்பர்ன் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நகரம், மெல்பர்ன். அங்கு வெளிப்புறங்களில் இருக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள், மெல்பர்ன் நகரக் பொலிஸாரிடம் மோதிக் கொண்டனர். 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
எளிதில் தொற்றக்கூடிய டெல்டா வகை கொரோனா வைரஸ் திரிபு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், முன்னெப்போதும் இல்லாத அளவு வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
Sat, 08/07/2021 - 10:06
from tkn