மங்களவின் திடீர் மறைவு எனக்கு பேரதிர்ச்சி தந்தது

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் இரங்கல்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும், சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன, தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

1956 மக்கள் புரட்சியில் பங்கேற்ற மறைந்த மகாநாம சமரவீரவின் புதல்வரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் திடீர் மறைவால் தான் மிகவும் அதிர்ச்சியடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமரர் மங்கள சமரவீர பாராளுமன்ற உறுப்பினராகவும் பல அரசாங்கங்களில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்ததுடன் அவர் பொறுப்பேற்ற அனைத்து விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன் ஒவ்வொரு பணியையும் ஆக்கபூர்வமாக செய்தார்.

அவருடைய அனைத்து கருத்துக்களுடனும் நாங்கள் உடன்படவில்லையென்றாலும், புதிய சக்திகளை உருவாக்கும் அவரது திறனை நாம் குறிப்பிட வேண்டும். அனைத்து கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுடன் நட்பாக செயற்படுவதற்காக அவர் வழங்கிய முன்மாதிரிகளை நான் இத்தருணத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

அவரது மறைவினால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு மற்றும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்மிடமிருந்து விடைபெற்ற மங்கள சமரவீரவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Wed, 08/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை