பாணின் விலையில் மாற்றமில்லை

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது

பேக்கரி உற்பத்தியாளர்கள்  சங்கம் தீர்மானம்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதில்லை என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இத்தீர்மானத்தை  எடுத்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பாண் ஒரு இறாத்தலின் விலையை ஐந்து ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை பத்து ரூபா வாலும் கேக் ஒரு கிலோவின் விலையை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு ஏற்கனவே பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது. அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன விலை அதிகரிப்பு தொடர்பில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

எனினும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்காது தொடர்ந்தும் நடைமுறையிலுள்ள விலைகளிலேயே விற்பனை செய்வதற்கு வெளி மாகாண பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதன் இணைப்புச் செயலாளர் காமினி கந்தேகெதர அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு மேலும் அசௌகரியங்களை விளைவிக்கும் வகையில் செயற்படாமல் புரிந்துணர்வுடன் சகல பேக்கரி உரிமையாளர்களும் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 08/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை