கறுப்புக்கொடி தீர்மானத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு

முஜிபுர் ரஹ்மான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி இன்று (21) கறுப்புக் கொடி பறக்க விடுவதற்கு கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்திருக்கிறது. பாதிக்கப்பட்பட்ட ஒரு சமூகம் என்றகையில் முஸ்லிம்களும் இதற்கு ஆதரவளிக்கவேண்டுமென கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஏப்ரல் 21 குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் நேற்று றடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Sat, 08/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை