கடலட்டைப் பண்ணை பிரச்சினைக்கு தீர்வு

முற்றுப்புள்ளி வைத்தார் டக்ளஸ்

பூநகரி, கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளை வழங்கியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் பூநகரி, கௌதாரிமுனை இலங்கை - சீனக் கூட்டு நிறுவனத்தினால் பரீட்சார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தை சட்ட ரீதியாக கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் ஆகியோர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பூநகரி, கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.

பூநகரி நக்டா நிறுவன வளாகத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் சம்பிரதாயபூர்வமாக ஏழு பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன. கௌதாரிமுனைப் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கான சுமார் 52 பிரதேசக் கடற்றொழிலாளர்கள் இதுவரை விண்ணப்பித்திருந்தனர்.

அதனடிப்படையில், பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக, பண்ணை அமைப்பதற்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பண்ணைகளை அமைப்பதற்கான ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவரும் கடற்றொழில் அமைச்சரினால் ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது. உடனடியாக களத்தில் இறங்கி வேலைகளை ஆரம்பிக்குமாறு பயனாளர்கள் மற்றும் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சார்த்த கடலட்டைக் குஞ்சு பராமரிப்பு நிலையத்தின் முதலீடும் தொழில்நுட்பமும் எமக்கு அவசியமாக இருப்பதனால் இக் கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தை கெளதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்திடம ஒப்படைப்பதற்கு தீர்மானக்கப்பட்டள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அறிவுத்துள்ளார்.

 

Wed, 08/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை