ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது பொலிஸார் கைவைக்க மாட்டார்கள்

ஆசிரியர்கள் தாக்கினாலும் பொறுமையாக இருக்க அறிவுரை

பாதிக்கப்படும் பொலிஸார் குறித்து எதிர்க்கட்சியின் மௌனம் −சரத் வீரசேக்கர கவலை

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீது பொலிஸார் ஒருபோதும் கை வைக்கமாட்டார்கள். ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தினாலும் பொறுமையாக இருக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இப்போது பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறான ஆர்ப்பட்டங்களால் பொலிஸ் அதிகாரியொருவர் விரல்கள் இரண்டை இழந்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினர் இதுவரையில் இந்த விடயம் குறித்து கண்டனத்தை வெளியிடவோ, கவலை வெளியிடவோ இல்லை.

நல்லாட்சி காலத்தில் நீர் பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகம், தடியடி பிரயோகம் என்பனவற்றை நடத்தினர். ஆனால் நாங்கள் ஒரு ஆசிரியர் மீதும் கைவைத்ததில்லை, கை வைக்கப் போவதும் இல்லை. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய எங்களை தாக்கினாலும் பொறுமையாக இருக்குமாறே பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 08/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை