ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்

கொரோனா பிரச்சினை, பொருளாதார நிலைமை என்பவற்றுடன் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் தாமதமுள்ள போதும் ஆசிரியர்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அதிபர் மற்றும் ஆசிரியர் பிரச்சினை தொடர்பில் 20 தொழிற்சங்களுடன் பல சுற்று பேச்சுக்கள் நடந்துள்ளன. கிடைக்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவர் ஒருவரை ஈர்க்க முடியாது. அரச துறையில் குறைந்த சம்பளத்தை ஆசிரியர்கள் பெறுகின்றனர். நாட்டில் கௌரமான சேவையாக ஆசிரியர் சேவை உள்ளது.அவர்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும். நியமிக்கப்பட்டுள்ள குழு இந்த பிரச்சினைகளை ஆராய்ந்து வருகிறது.

ஆசிரியர் சேவை தொடர்பில் 2020 இல் நான் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தேன். ஆசிரியர் சேவையில் ஆரம்ப சம்பளம் 27 ஆயிரமாக உள்ளது. ஆனால் அதே பாடசாலையில் கல்வி சாரா ஊழியர் அதனை விட அதிக சம்பளம் பெறுகிறார். எமது கொள்கை பிரகடனத்தில் ஆசிரியர் சம்பள விடயம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினை, பொருளாதார நிலைமை என்பவற்றுடன் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் தாமதம் உள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

 
Thu, 08/19/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை