பஞ்சாப் மாகாணத்தில் இந்து கோயில் சேதம்; இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் செந்தில் தொண்டமான் வருத்தம் தெரிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போங்க் நகரத்திலுள்ள இந்து கோயிலை கும்பலொன்று சேதப்படுத்திய சம்பவத்துக்காக பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் இலங்கைக்கான பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் ஹமீட்டிடம் தமது வருத்ததை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அங்கு வாழும் இந்து சமூகங்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களிலிருந்து கோயிலைப் பாதுகாக்கவும், விரைவில் கோயிலை புனரமைக்கவும் நடவடிக்கையெடுக்குமாறும் செந்தில் தொண்டமான், பாஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தூதுவர் அப்சல் மரிக்காருடன் தொலைப்பேசியினூடாக தொடர்புக் கொண்டு மேலதிக கலந்துரையாடலையும் செந்தில் தொண்டமான் நடத்தியுள்ளார்.

Mon, 08/09/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை