ஹற்றன் தபாலகத்திற்கு பூட்டு

ஹற்றன் தபாலக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து 14 நாட்களுக்கு தபாலகம் மூடப்பட்டுள்ளது.

இருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அங்கு கடமையாற்றிய 19 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேறு ஊழியர்களை வைத்து தபாலகத்தை நடாத்த பொது சுகாதார அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஊழியர்கள் அனைவரும் தொற்றுக்குள்ளான இரண்டு ஊழியர்களுடன் தொடர்பினை பேணியுள்ளமையால் எதிர்வரும் 14 நாட்களுக்கு தபாலகம் மூடப்பட்டுள்ளதாக தபாலக அதிகாரிகள் தெரிவித்தனர் .

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

 

 

Thu, 08/19/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை