இலங்கையின் ஒட்சிசன் தேவைகளுக்கு இந்தியா முன்னுரிமையளிக்க வேண்டும்

இந்திய தூதுவரிடம் அமைச்சர் கெஹெலிய கோரிக்கை

இலங்கையின் ஒட்சிசன் தேவைகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிடம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கோரிக்கை விடுத்தார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ சந்திப்பொன்று நேற்று(25) புதன்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

சமகால கொவிட் நெருக்கடிகளை எதிர்கொள்ள இந்தியாவிடமிருந்து இலங்கைஎதிர்பார்த்துள்ள உதவிகள் குறித்து இதன்போது இருவரும் ஆழமாக கலந்துரையாடிதுடன், இலங்கையின் ஒட்சிசன் தேவைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்க வேண்டுமென இதன்போது சுகாதார அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், இலங்கைக்கு டோசிலிசுமாட் (டோசி) மருந்தை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக் கொண்டார்.

நீண்டகால நட்பு கொண்ட அண்டை நாடாக இந்தியா இலங்கையில் கொவிட்டை ஒடுக்குவதில் வகிக்கும் பங்கை சுகாதார அமைச்சர் பாராட்டியதுடன் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடிந்த போதெல்லாம் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்றுக்கொண்டமையை முன்னிட்டு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்தியதுடன், கொவிட் -19 தொற்றை ஒடுக்கும் பணியில் இந்தியா இலங்கைக்கு முழுமையான ஆதரவையும் தொடர்ந்து வழங்கும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Thu, 08/26/2021 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை