தமிழ்த் தேசிய தலைவர்கள் மந்திராலோசனையில்!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இணையவழியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ் கட்சிகள் இணைந்து ஜெனிவாவிற்கு கடிதமொன்றை அனுப்புவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேநேரம், முதற்கட்டமாக ஒருமித்த நிலைப்பாட்டில் இணக்கம் காண்பதற்கு இதன்போது நான்கு விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டதாக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். அதன்படி, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, திட்டமிட்ட காணி அபகரிப்பை நிறுத்துதல் மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் ஆகிய விடயங்களே இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

 

Wed, 08/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை