சகல கட்சிகளையும் ஒன்றிணைத்த வேலைத்திட்டம் அவசியம்

ஐ.ம.ச. தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க

கொவிட் தொற்று பரவல் தேசிய அனர்த்தம் என்பதன் காரணமாகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதனை அதிகாரத்தை  கைப்பற்றுவதற்கான முயற்சியாக அரசாங்கம் கருதக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டை முடக்காமல் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்பட்டது. எனினும் வர்த்தக சங்கங்கள் உள்ளிட்டவை சுயமாக முடக்கத்தை ஆரம்பித்தன.

இதனை எதிர்பார்த்திராத ஜனாதிபதி விருப்பம் இல்லாவிட்டாலும் நாட்டை முடக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டார். எனவே தான் தொடர்ந்தும் முடக்க நேரிட்டால் தியாகங்களுக்கு தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி மறைமுகமாக நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளார்.

இந்த மறைமுக எச்சரிக்கையின் மூலம் எதிர்வரும் தினங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.கொவிட் தொற்றின் காரணமாக இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கியமை மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அல்ல.

அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இன்மையே இதற்கான பிரதான காரணி என்றும் அவர் தெரிவித்தார்,

எதிர்க்கட்சிகள் நாட்டை முழுவதுமாக மூடுவதற்கான பிரசாரத்தை மேற்கொண்டன. சில சமயத்தில் மூடுமாறு கோருவர். சில சமயம் திறக்குமாறு கோருவர். எதிர்க்கட்சிக்கு ஒரு நிலைப்பாடு கிடையாது. அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்ப்பதை தான் எதிரணி செய்கிறது.கொரோனா தொற்றுநோயின் போது தான் எதிர்க்கட்சியிலுள்ள சஜித் தரப்பு, மக்கள் விடுதலை முன்னணி என்பன இணைந்து போராட்ட அலைகளைத் தொடங்கின. அவர்கள் தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த நாட்டின் அப்பாவி மக்களை பலிக்கடாவாக்கினர். சுகாதாரத் துறை வழங்கிய அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை அவர்கள் ஏற்கவில்லை. இவ்வாறு சுகாதார விதிகளை மீறியவர்கள் இப்போது சுகாதாரம் பற்றி பேசுகிறார்கள் என்றார்.

 

Tue, 08/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை