கொரோனா தொற்று உருவாகும் நிலை அதிகம்

புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் வீதம் அதிகரிப்பதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 சம்பந்தமான பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த செயற்பாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதாகவும்

அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டில் நாளாந்தம் 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் புகைப்பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், நாளாந்தம் 15 வயதுக்கு குறைவான சுமார் 4,000 சிறுவர்கள் புகைபிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.

Mon, 08/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை