நாட்டில் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை

நாட்டில் 40 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதுடன், அரச வைத்தியசாலைகளில் மருந்துப்பற்றாக்குறை இல்லையென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

கொவிட் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. எனினும், மருந்துகள் தொடர்பாக அவர் அவ்வப்போது கூறும் கருத்துகள் சரியானவை அல்ல.

கடுமையான மருந்து பற்றாக்குறையின் மத்தியில் அரசாங்கம் மனித உயிர்களில் விளையாட்டை நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார்.

நாடு முழுவதும் ஏற்கனவே சுமார் 40 அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய்யானதொரு தகவலாகும். இந்த செய்தியை வெளியிட்டிருந்த இரண்டு தேசிய நாளிதழ்களும் எவ்வித ஆய்வுகளையும் நடத்தாது நாட்டில் மருந்து பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளன.

மருந்துகள் அத்தியாவசியமானவை மற்றும் அத்தியாவசியமற்றவை என வகைப்படுத்தலாம். பட்டியலில் உள்ள 40 மருந்துகளில், ஒரு மருந்து இரண்டு முறை பட்டியலிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 39 வகையான மருந்துகளில், 22 மட்டுமே அத்தியாவசிய மருந்துகளாக உள்ளன. அந்த 22 இல் பதினைந்து மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் உள்ள வெளிநோயாளர் பிரிவில் உள்ளன.

மீதமுள்ள 7 மருத்துகளுக்கு மாற்றுப்பயன்பாடு கொண்ட

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு மருந்துகளும் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள மருந்துகள் எதுவும் கொவிட் 19 நோய்க்கு வழங்கப்படுபவையல்ல.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பான பதவியை வகிக்கும் அவர், ஒரு செய்தித்தாளில் என்ன வெளியிடப்பட்டது என்று விசாரிக்காமல், அந்த தவறை மீண்டும் செய்வது பொருத்தமாக இருக்காது.

டொலிசிசுமாப் என்ற மருந்து பற்றாக்குறையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். கடுமையான கொவிட் -19 நோயாளிகளுக்கு அவசர உபயோகத்திற்காக டொலிசிசுமாப் மருந்தை பயன்படுத்த அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

அதே சமயத்தில், டொலிசிசுமாப் மருந்துக்கு உலகளவில் அதிக தேவை இருந்தது. உலகம் முழுவதும் அதிக தேவை காரணமாக, இந்த மருந்துகுறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே டொலிசிசுமாப் மருந்தை இலங்கைக்கு கொண்டு வர அனுமதி பெற்றுள்ளது.

பல ஆண்டுகளாக, இந்த தனியார் நிறுவனம் மூலம் கீழ்வாதம் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய டொலிசிசுமாப் மருந்தை ஒரு குறிப்பிட்ட அளவு இறக்குமதி செய்து வருகிறது.

எனினும், இந்த மருந்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்க மே 6, 2021 அன்று சுவாச மருத்துவர்களின் சங்கம் எமது அமைச்சின் செயலாளரை சந்தித்தது.

இந்த விடயத்தை விசாரித்த பிறகு, இலங்கைக்கு அதிக டொலிசிசுமாப் மருந்துகளை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Sat, 08/21/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை