கடமைக்குத் திரும்புமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சர் வேண்டுகோள்

அனைத்து அரசாங்க ஊழியர்களும் கடமைக்குத் திரும்ப வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அனைத்து அதிபர்கள் ஆசிரியர்களும் கடமைக்குத் திரும்ப வேண்டுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளைத் திறப்பதற்கு தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அதிபர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் கல்வியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம் இந்த வேண்டுகோளை வினயமாக விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் அதனையடுத்து பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பாடசாலைகளை மூடி வைத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை கருத்திற்கொண்டு முன்னோடி நடவடிக்கையாக ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்கு சமூகமளித்து தேவையான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார், அனைவருடனும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்றையதினம் பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள பொது ஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பாடசாலைகளை மூடி வைத்திருக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், விரைவாக பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை